Dinaithal - தினஇதழ்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை : சிபிஐ விளக்கம்


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை : சிபிஐ விளக்கம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி நீதிமன்றத்தில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனு மீது சிபிஐ தரப்பு வக்கீல் இன்று பதில் அளித்தார். அதில்,

தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் ஜாமீன் கோரியுள்ளனர்.

2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமருக்கு தெரிந்தே நடந்தது:ஆ.ராஜா

2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமருக்கு தெரிந்தே நடந்தது:ஆ.ராஜா

2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமரின் முடிவின் பேரில், மேலும் அவரது ஒப்புதல் பெற்றே அனைத்தையும் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா டெல்லி  சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

English summary

all decisions have been taken with the guidance and approval of pm :a rasa

2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு மே 26ல் ஆஜராக சம்மன்!

2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு மே 26ல் ஆஜராக சம்மன்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் சட்ட விரோதமாக  ரூ.200 கோடியை தந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 10 பேர் மீதும் மற்றும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

மேலும் இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்பட 19 பேர் வரும் மே 26 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு  சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

2ஜி ஊழல் வழக்கில் 1800 கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார்: ஆ.ராசா அதிரடி

2ஜி ஊழல் வழக்கில் 1800 கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார்: ஆ.ராசா அதிரடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான 1,800 கேள்விகளையும் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 4 ஆயிரம் பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மேலும் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராசா,

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த 21ஆம் தேதியே தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்திருக்க வேண்டியது. அப்போதே நான் தயாராக இருந்தேன். தற்போது 1800 கேள்விகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

மேலும் இதை தவிர இந்த வழக்கு குறித்த அனைத்து விவரங்களையும் எனது அறிக்கை மூலமாக பத்திரிகைகள் வாயிலாக அனைவருக்கும் தெளிவாக கூறிவிட்டேன் என்றார்.

English summary

i am ready to answer 1800 questions by cbi : a rasa

2ஜி வழக்கு கனிமொழியை காப்பாற்ற சதி: பிரசாந்த் பூஷன்  தகவல்!


2ஜி வழக்கு கனிமொழியை காப்பாற்ற சதி: பிரசாந்த் பூஷன் தகவல்!

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் கூறியபோது,

2ஜி  தொடர்பாக திமுக., ஆட்சியின்போது உளவுதுறை தலைவராக பணியாற்றிய ஜாபர்சேட்- சரத்ரெட்டி இடையே நடந்த புதிய உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஜாபர்சேட்-கருணாநிதியின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் இடையே நடந்த உரையாடலும் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த உரையாடல்களில் ரூ.200 கோடி வரை பணப்பறிமாற்றம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி வழக்கிலிருந்து கனிமொழியை காப்பாற்ற சதி நடந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

english summary

saving kanmozhi from 2g case : prashanth pusan

தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை சி.ஏ.ஜி. தணிக்கை செய்யலாம்

தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை சி.ஏ.ஜி. தணிக்கை செய்யலாம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அத்துடன், இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகளை மத்திய தணிக்கைக் குழு ஆய்வு செய்ய முடிவு செய்தது. இதற்காக அந்த நிறுவனங்களின் வருவாய் குறித்த தகவல்களை சி.ஏ.ஜி. கேட்டிருந்தது.

இதையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுப்ரீம் கோட்டில் முறையிட்டன. ஆனால், இந்த வழக்கை மீண்டும் ஐகோர்ட்டுக்கு பரிந்துரை செய்தது சுப்ரீம் கோர்ட்.

அதன்படி ஐகோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மனுதாரர்களின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசுடன் வருவாய் பகிர்வு அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மத்திய தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு உட்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தால் என் மதிப்பு மரியாதை போய்விட்டது: அனில் அம்பானி

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா அம்பானி ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அனில் அம்பானி சி.பி.ஐ.யிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

2 ஜி ஊழல் வழக்கு காரணமாக எனக்கு மதிப்பு-மரியாதை எல்லாம் போய்விட்டது. என் ஊழியர்கள் மீது எனக்கு நம்பிக்கைக்கு இருக்கிறது. இந்த 2ஜி விவகாரத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக நஷ்ட தான் ஏற்பட்டுள்ளது. மூலதன சந்தையில் எனது ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொலை தொடர்பை எளிமையாக்க வேண்டும் என்ற என் தந்தையில் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை.

இவ்வாறு அனில் அம்பானி கூறியுள்ளார்.

-தின இதழ் செய்தி குழு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தால் என் மதிப்பு மரியாதை போய்விட்டது: அனில் அம்பானி

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா அம்பானி ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அனில் அம்பானி சி.பி.ஐ.யிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

2 ஜி ஊழல் வழக்கு காரணமாக எனக்கு மதிப்பு-மரியாதை எல்லாம் போய்விட்டது. என் ஊழியர்கள் மீது எனக்கு நம்பிக்கைக்கு இருக்கிறது. இந்த 2ஜி விவகாரத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக நஷ்ட தான் ஏற்பட்டுள்ளது. மூலதன சந்தையில் எனது ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொலை தொடர்பை எளிமையாக்க வேண்டும் என்ற என் தந்தையில் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை.

இவ்வாறு அனில் அம்பானி கூறியுள்ளார்.

-தின இதழ் செய்தி குழு

2ஜி ஊழல் பணம் தின்னும் காங்கிரஸ் அரசு : சாப்பாட்டு பில்லில் பரபரப்பு

மும்பையில் ஹோட்டல் ஒன்றில் நாட்டில் ஆளும் மத்திய அரசு ஊழல் குறித்து விமர்சனம் செய்து சாப்பாட்டு பில்லில் பிரிண்ட் செய்தது .

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஓட்டலை இழுத்து மூடச்செய்தனர். மேலும் அவதூறு பரப்பியதாக அந்த ஓட்டல் அதிபர் மீது காங்., தரப்பில் போலீசில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கே.இ,எம்., மருத்துவமனை எதிரே ஆதித்தி பியூர் வெஜ் என்ற ஓட்டல் நடந்து வருகிறது. இதன் உரிமையாளர், காங்கிரஸ் அரசு குறித்து தனது விமர்சனத்தை பில்லில் தெரிவித்துள்ளார்.

அந்த பில்லில் கூறப்பட்டிருந்த விமர்சனம் வருமாறு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பணம் தின்னு ‌கொண்டிருப்பது ( 2ஜி ,நிலக்கரி, கமான்வெல்த் விளையாட்டு ஊழல் மூலம் ) அவசியமானது.

ஆனால் ஏ.சி., ஓட்டல்களில் சாப்பிடும் வகை ஆடம்பரம் ஆகும். இவ்வாறு அச்சடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரி விதிப்பை கண்டித்து இவ்வாறு ஓட்டல் ஓனர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த தகவல் இப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து மும்பை காங்., தலைவர் கணேஷ்குமார் யாதவ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த ஓட்டல் முன்பு கூடினர். ஓட்டலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கடையை அடைத்தனர்.

மேலும் அவதூறு பரப்புவதாக காங்., தரப்பில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் 501 செக்சன் படி வழக்கு பதிவு செய்தனர். ஓட்டல் அதிபர் அச்சடித்த வாசகம் மும்பை முழுவதும் அரசியல் பிரமுகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

2ஜி வழக்கு அரசு தரப்பு சாட்சியாகிறார் அம்பானி: டெல்லி கோர்ட் அனுமதி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக 2011ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி உள்ளிட்ட சிலரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க விரும்புவதாகவும், இதற்காக அவர்களுக்கு 'சம்மன்' அனுப்ப வேண்டும் என்றும் கோரி சி.பி.ஐ. சார்பில், டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற கோர்ட், அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. இதற்காக சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பக்கம் 1 / 2

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?