Dinaithal - தினஇதழ்

உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்


உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உலகமெங்கிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தன.

இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்  இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவர், உத்தரபிரதேசத்தில் 42 காவல் உயர் அதிகாரிகளை கூண்டோடு அதிரடி மாற்றம் செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சாதாரணம் :சமாஜ்வாடி

 உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சாதாரணம் :சமாஜ்வாடி

உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனால், அம்மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மோசின்கான் இது குறித்து கூறுகையில்

உத்தரபிரதேசம் ஒரு பெரிய மாநிலம். எனவே, இங்கு கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது சாதாரணம், என்று கூறி, பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளார்.


 

உத்திரபிரதேசத்தில் மின்னல் தாக்கி  பெண்கள் பலி

உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாதமாக பருவ மழை பெய்து வருகிறது.  கவுஷாம்பிகா மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.

அப்போது மஞ்சன்பூர் பகுதியில் உள்ள ஜபர்பூர் மற்றும் சாக் குரைனி கிராமங்களில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கியது. இதில் ஜகியா, பெலாதேவி என்ற இரு பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

அதேபோல் நேற்று மாலை லோகாடியா மற்றும் சேத்பூர் கிராமங்களில் மின்னல் தாக்கியதிலும் சத்ரூபா, பூலாதேவி என்ற பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். லோதர் என்ற இடத்திலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?