Dinaithal - தினஇதழ்

ஆமாம் நான் லஞ்சம் கேட்டது உண்மைதான் , வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் .

கர்நாடக மாநில சட்டசபை  மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஜிகவுடா பாட்டீல் என்பவர் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பி முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமியிடம் ஆதரவு கேட்டார்.

 

அப்போது எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தருவதற்கு ரூ.1 கோடி வேண்டும் என்று கேட்பதாக குமாரசாமி கூறியுள்ளார். பின்னர் ரூ. 20 கோடி தாருங்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன் என்று குமாரசாமி கூறியுள்ளார். இதற்கிடையே விஜிகவுடா பாட்டீல், குமாரசாமியுடன் நடைபெற்ற உரையால் தொடர்பாக 35 நமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்களது பேச்சு வீடியோவாக உள்ளூர் தொலைக் காட்சியில் வெளியானது இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தொலைபேசி உரையாடலில் இடம் பெற்று இருப்பது தன்னுடைய குரல்தான் என்பதை ஒப்புக் கொண்டார்.  மேலும், தான் ஒன்றும் பெரிய குற்றத்தை செய்யவில்லை என்று கூறியுள்ளார். மாநிலத்தில் 2008ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சூழ்நிலையில் மாறிவிட்டது. எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தர மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பணம் கேட்கவில்லை. காங்கிரஸ் பாரதீய ஜனதாவும்  இதனையே செய்கின்றன. இதுதொடர்பாக விவாதம் நடத்த தயராக இருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலில் ஆதரவு அளிக்க பேரம் பேசுவது நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடப்பதுதான். தற்போதைய அரசியல் நிலவரத்தையே நான் எடுத்துக் கூறினேன். ஆனால், பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாரதிய ஜனதாவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

பாரதிய ஜனதாவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

கர்நாடக பாரதிய ஜனதா ஆட்சியின் போது முதல்வராக இருந்த பி.எஸ். எடியூரப்பா, சுரங்க நில பேர வழக்கில் சிக்கினார். இதையடுத்து அவர் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சதானந்த கவுடா முதல் அமைச்சரானார்.

பின்னர் பாரதிய ஜனதாவில் இருந்து விலகிய எடியூரப்பா, ஒரு வருடத்திற்கு முன்பு கர்நாடக ஜனதா கட்சியை தோற்றுவித்து கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தார். இதில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது அபிமானியான எடியூரப்பா மீண்டும் பாரதிய ஜனதாவில் மீண்டும் இணைவார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதற்கான அழைப்புகளும் விடுக்கப்பட்டன. முதலில் இதனை மறுத்து வந்த எடியூரப்பா, பின்னர் பா.ஜனதாவில் இணைவதாக அறிவித்தார்.

கர்நாடக லிங்காயத் சமுதாய மக்களின் சக்திவாய்ந்த மனிதராக கருதப்படும் எடியூரப்பா இன்று மாலை முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பெங்களூரில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு நிகழ்ச்சியில், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர்.

ஜீப் மீது பஸ் மோதி 16 பேர் பலி: கர்நாடகாவில் பரிதாபம்

கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 16 பேர் பலியாகினர்.

குல்பர்கா-பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜிந்தகி என்ற இடத்தில், ஜீப் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த அனைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

-தின இதழ் செய்தி குழு

கர்நாடகாவில் குடிபோதையில் பாடம் நடத்திய அரசு ஆசிரியர்: போதையில் பள்ளி வளாகத்திலேயே மயக்கம்

கர்நாடகாவில் சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா சிக்கபானூர் கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சந்திரப்பா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வழக்கமாக பள்ளி முடிந்ததும் மாலையில் மது குடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

ஆனால் சில நாட்களாக காலையில் பள்ளிக்கு வரும்போதே ஆசிரியர் சந்திரப்பா மதுகுடித்து விட்டு வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி உள்ளார். இதுபற்றி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கூறி உள்ளனர். தலைமை ஆசிரியர் உடனே ஆசிரியர் சந்திரப்பாவை அழைத்து கண்டித்து இருக்கிறார். அதன் பின்னர் ஓரிரு நாட்கள் ஆசிரியர் சந்திரப்பா ஒழுங்காக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் ஆசிரியர் சந்திரப்பா மீண்டும் மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி உள்ளார். அதன்பிறகு போதையில் பள்ளி வளாகத்திலேயே மயங்கி கிடந்து உள்ளார்.

இதுகுறித்து சிக்கமகளூர் மாவட்ட கல்வி அதிகாரி ராஜப்பாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுகுடித்து விட்டு பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் சந்திரப்பாவை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி ராஜப்பா உத்தரவிட்டார்.

-தின இதழ் செய்தி குழு

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?