Dinaithal - தினஇதழ்

அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு



அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கேரளாவின் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில், தமிழகத்தின் எல்லையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும்

மேலும் சென்னையைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?