Dinaithal - தினஇதழ்

மலேசியா

மூன்றாவது உலகப்போர்: ரஷ்யா மீது உக்ரைன் பிரதமர்  பரபரப்பு புகார்

மூன்றாவது உலகப்போர்: ரஷ்யா மீது உக்ரைன் பிரதமர் பரபரப்பு புகார் இரண்டாவது உலகப் போர் ஏற்படுத்திய சோக வடுக்கள் இன்னமும் மறையாத நிலையில், மூன்றாவது உலக போருக்கு ரஷ்யா வித்திட்டுள்ளது என, உக்ரைன் பிரதமர் அர்சனி யாட்செனிக் குற்றம் சாட்டி உள்ளார். மேலும்  Read more...

சிங்கப்பூரில் தமிழக பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சென்னை இளைஞர் கைது

வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழக பெண்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்திய சென்னை வாலிபரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையை சேர்ந்தவர் கோதண்டன் வினோத் (வயது 24) இவர் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மாதம், 30 Read more...

திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி ராஜபக்ச

லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் லாஸ் ஏஞ்சலெஸை சேர்ந்த பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்சே குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் தற்போதைய Read more...

அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் இளைஞர் பிரிவின் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள அர் ரஹ்மான் பள்ளிவாசலில்  ஜுன் 22ம் தேதி கூடியதற்காக அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் மூன்று  பிகேஆர் இளைஞர் தலைவர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது. 29 வயது நஸ்ரி முகமட் யூனுஸ், 38 வயது Read more...

சிங்கப்பூரில் சீனப்பெண் கொலை : இந்தியர் மீது வழக்கு

சிங்கப்பூரில் ரங்கராஜ் பாலசாமி என்பவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சீனாவை சேர்ந்த லோவ் பூங்யங் (56). 2011-ம் ஆண்டில் வக்கீல் அலுவலகம் தீ வைக்கப்பட்டு அதில் லோவ் இறந்தார். இச்சம்பவத்தையொட்டி தற்போது இந்திய வம்சாவளியான கோவிந்தசாமி நல்லையா (66) Read more...
மலேசியாவின், பெரக் மாகாணத்தில் உள்ள இபோ பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மனைவி இந்திரா காந்தி. கடந்த, 2009ல், பத்மநாதன் முஸ்லிமாக மாறினார். தன் குழந்தைகள் 3 பேரையும், மனைவியின் எதிர்ப்பை மீறி முஸ்லிமாக மாற்றி விட்டார்.தற்போது கணவனை பிரிந்து Read more...

குளியலறையில் அமர்ந்து மாணவர்களை சாப்பிட சொன்ன பள்ளி

மலேசியாவில் பள்ளி நிர்வாகமொன்று மாணவர்களை குளியலறையில் சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரமலான் நோன்பு காலம் என்பதால், உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர். இந்நிலையில் மலேசியாவின் சுங்காய் புலோ என்ற இடத்தில் உள்ள செரி பிரஸ்தினா பள்ளி, முஸ்லிம் Read more...

மலேசிய தூதரக IFTAR நோன்பு திறப்பு விழா

மலேசிய தூதரகம் சார்பில் IFTAR நோன்பு திறப்பு விழா T-நகர், Residency Towers Hotel-ல்  (22.07.2013) அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் திரைப்பட நடிகர் திரு.வின்சன்ட் அசோகன், காமெடி நடிகர் திரு.பாண்டு, Prof.Dr.C.N.K.ரெட்டி, Shelter Hotel Read more...

கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல்!

கோலாலம்பூர், ஜூலை 24 – திரங்கானு  மாநிலம் கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினரான ரஹ்மான் மொஹ்தார் கடந்த ஜூன் மாதம்  26 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில், பாஸ் கட்சியும், Read more...

சபா அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை – மூசா அமான் மறுப்பு

சபா அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று சபா மாநில முதல் அமைச்சர் மூசா அமான் அரச விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். இது குறித்து இன்று கோத்தா கினபாலுவில் உள்ள அரச விசாரணை ஆணையத்திடம் மூசா Read more...

பத்துகாஜாவில் தடுப்புக் காவலில் 26 வயது ஆடவர் மரணம்- உடலில் காயங்கள் இருப்பதாக தந்தை புகார்

பத்து காஜாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 26 வயது ஆடவர் ஒருவர் மரணமடைந்தார். தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள் மரணமடைவது குறித்த விவகாரம், தர்மேந்திரன் மரணத்திற்குப் பிறகு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. நாடெங்கிலும் தர்மேந்திரன் மரணம் பேசப்பட்டு, காவல்துறையின் மீது கடுமையான Read more...

தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதன் பின்னணி என்ன? – மூத்த வழக்கறிஞர் விளக்கம்

சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பது தொடர் நிகழ்வாகிப் போய்விட்டது. இதற்கு விசாரணை செய்வது குறித்து காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தராததும் ஒரு காரணம் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். வழக்கறிஞர் மன்றத்தின் குற்றவியல் Read more...

அழியா ‘மை’ விவகாரத்தை விசாரணை செய்ய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் புதிய குழு!

பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா ‘மை’ குறித்து விசாரணை செய்ய புதிய குழு ஒன்றை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நியமித்துள்ளது. இந்த அழியாமை வாங்கப்பட்டதிலும், அதை மே 5 பொதுத்தேர்தலில் பயன்படுத்தியதிலும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதை இந்த குழு ஆராயும் Read more...

மலேசியாவில் பிடிபட்ட தீவிரவாதி இந்தியாவிடம் ஒப்படைப்பு

மலேசியாவில் போலி ஆவணங்களுடன் தங்கி இருந்த சத்பால் சிங்(41) என்பவர் ஜனவரி மாதம் அதிகாரிகளிடம் பிடிபட்டார். இவர் ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பதும், இந்தியாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் தேடப்படுபவர் என்பதும் மலேசிய தீவிரவாத தடுப்பு துறைக்கு Read more...

கோல பெசுட் தொகுதி: திரங்கானு சபாநாயகர் காலியிட அறிவிப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்!

கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. ரஹ்மான் மொஹ்தாரின் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான காலியிட அறிவிப்பை, திரங்கானு சபாநாயகர் ஸூபிர் எம்போங் இன்று காலை 10 மணியளவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து, திரங்கானு மாநில தேர்தல் ஆணையத் Read more...

‘ஐபிசிஎம்சி’ யை உடனடியாக அமைக்க வேண்டும் – கோலாலம்பூர்  உயர்நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

அதிகரித்து வரும் தடுப்புக் காவல் மரணங்களைக் கருத்தில் கொண்டு, காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (Independent Police Complaints and Misconduct Commission – IPCMC) ஐ உடனடியாக அமைக்க வேண்டும் என்று Read more...

மலேசியா : நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்! 25 பேர் கைது!

மலேசியாவில் தேர்தலுக்குப் பிறகு முதன் முறையாக நேற்று நாடாளுமன்றம் கூடிய வேளையில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் காவல்துறையினரின் தடை வேலியைத் தாண்டி நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினருக்கும் ஆர்ப் பாட்டக்காரர்களுக்கும் Read more...

கிள்ளான் பள்ளத்தாக்கில் புகைமூட்டம் அதிகரிப்பு!

இன்றைய நிலவரப்படி புகை மூட்டம் ஜோகூர் மற்றும் மூவாரில் குறைந்துள்ளது. ஆனால் கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறை இன்று காலை 11 மணியளவில் வெளியிட்ட நிலவரப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கெமாமன் பகுதிகளில் புகையின் தாக்கம் முறையே 288 மற்றும் Read more...
நேற்றைய முன்தினம் செவ்வாய்க்கிழமை ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கையில் மலேசியாவின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு பட்டியல் பலத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.விளம்பரப் பக்கம் போல் தோற்றமளிக்கும் அந்த செய்தியில் யார் அந்த விளம்பரத்தை வெளியிடுகின்றார்கள் என்பது பற்றியோ, Read more...
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக வரும் சனிக்கிழமை பாடாங் மெர்போக்கில் நடக்கவுள்ள எதிர்கட்சியினரின் கறுப்பு 505 பேரணியில், பக்காத்தான் மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோலாலம்பூரில் 7 இடங்களில் ஒன்று கூட திட்டமிட்டுள்ளனர்.அதன் படி அவர்கள், பிரிக்பீல்ட்ஸ், தேசியப் பள்ளிவாசல், Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?