Dinaithal - தினஇதழ்

திரு. மனோ கணேசன்: சிங்கள மக்களும், அரசும் நல்லிணக்க அறிகுறி வடக்கில் இருந்து அனுப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

  • Published inஈழம்
  • Print

திரு. மனோ கணேசன்: சிங்கள மக்களும், அரசும் நல்லிணக்க அறிகுறி வடக்கில் இருந்து அனுப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

திரு. மனோ கணேசன்: சிங்கள மக்களும், அரசும் நல்லிணக்க அறிகுறி வடக்கில் இருந்து அனுப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் தனியார் தொலைகாட்சி ஒன்றின் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இங்கு வந்துள்ள ஜேவிபி நண்பர், மாகாணசபையை இந்தியா இந்நாட்டில் திணித்தது என்றும், இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமது கட்சி புதிய மக்கள் சபை யோசனைகளை முன் வைத்துள்ளது என்றும் கூறுகிறார். தமிழ் மக்களுக்கு இத்தகைய மக்கள் சபை யோசனைகள் போன்றவற்றை பரிசீலிக்கும் காலம் கடந்துவிட்டது. நாட்டு நடப்பை பார்த்தால் இத்தகைய யோசனைகள் நடைமுறையாக நூறு வருடம் கடந்தாலும் ஆச்சரியமில்லை. எங்களால் அதுவரை காத்திருக்க முடியுமா? அடுத்து மாகாணசபை எங்களுக்கான தீர்வு அல்ல என்பது தமிழர் முடிவு. ஆனால் அதை ஒரு ஆரம்ப புள்ளியாக கொண்டு நாம் பயணிக்கின்றோம். எனவே அதையும் இல்லாமல் செய்ய முயலாதீர்கள். இந்த நாட்டு சிங்கள தலைவர்கள் இந்நாட்டு தமிழ் தலைவர்களுக்கு வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய காலம் இன்று மலையேறிவிட்டது. இன்று இந்நாட்டு ஜனாதிபதி, ஐநா செயலாளர் பான்கி மூனுக்கு, 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்து, அதை மேலும் அபிவிருத்தி செய்து முன் கொண்டு செல்வதாக எழுத்துமூலம் உறுதி வழங்கியுள்ளார். எனவே அதில் இருந்து நாம் இறங்கி வந்து நேரத்தை வீணடிக்க எம்மால் முடியாது. அடுத்து மாகானசபையோ, பிராந்திய சபையோ பெயர்கள் முக்கியம் அல்ல. அதிகாரப்பகிர்வு என்ற கொள்கை தான் முக்கியம். அதை இந்த நாட்டுக்கு இந்தியா கொண்டு வரவில்லை. சரித்திரத்தை படித்து உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். 1957இல் பண்டா செல்வா ஒப்பந்தம் வந்தபோது, 1965இல் டட்லி செல்வா ஒப்பந்தம் வந்தபோது, இங்கே ஜவஹர்லால் நேரு வரவில்லை. அவை முழுக்க, முழுக்க உள்நாட்டு அதிகார பகிர்வு திட்டம். ஆகவே அதிகார பகிர்வு கொள்கையை அந்நிய சக்திகளான இந்தியா, அமெரிக்கா அல்லது ஐநா சபை ஆகியவை இலங்கைக்கு கொண்டு வந்து இந்நாட்டு மக்களின் மனங்களை கெடுத்துவிட்டதாக உண்மைக்கு புறம்பாக பேசாதீர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?