Dinaithal - தினஇதழ்

ஐ.நா.வுக்கான இலங்கை தூதருக்கு கனடா அரசு விசா வழங்க மறுப்பு!

  • Published inஈழம்
  • Print

ஐ.நா.வுக்கான இலங்கை தூதருக்கு கனடா அரசு விசா வழங்க மறுப்பு!

ஐ.நா.வுக்கான இலங்கை தூதருக்கு கனடா அரசு விசா வழங்க மறுப்பு!

ஐ.நா.வுக்கான இலங்கையின் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விசா வழங்க கனடா அரசு மறுத்துவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா,

போர்க்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவராவார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சேவின் நேரடி உத்தரவுபடி, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்ததாக, பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நா.வுக்கான பிரதித் தூதுவராக அவரை இலங்கை அரசு நியமித்து கௌரவித்தது.


மேலும், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, இவரை பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க ராணுவ போர்க் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்து கொள்வதற்கு, அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்தது.

அதுபோலவே, அண்மையில் சவேந்திர சில்வாவை, தென் ஆப்பிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்நிலையிலேயே, கனடாவும் அவருக்கு விசா வழங்க மறுத்த விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது.

கனடாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அண்மையில், அங்கு செல்ல முயன்றபோதே, அவருக்கு விசா வழங்க கனடா அரசு மறுத்துவிட்டதாக, இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களுக்கு நெருக்கமான கொழும்பு ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

English Summary

Canada government refused to give visa for srilankan UN Ambassador

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?