Dinaithal - தினஇதழ்

1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து  கூடங்குளம் அணுமின் நிலையம்  சாதனை


1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணுமின் நிலையம் சாதனை


கூடங்குளம் அணுமின் நிலையம் முதல் யூனிட்டில் இருந்து இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது.

மேலும் மின் உற்பத்தி துவங்கிய நாள் முதல், இன்று வரை 1800 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுஉலை வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார்.

கூடங்குளம் பகுதியில் 68 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்

கூடங்குளம் பகுதியில் 68 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சிக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட 12 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 100 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரப்பரணி நீர் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாளொன்றுக்கு ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 68 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வருடாந்திர பராமரிப்பு செலவிற்காக 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு : கூடங்குளத்தில் 3, 4வது உலைக்கு ஒப்பந்தம்

பிரதமருக்கு எதிராக இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு : கூடங்குளத்தில் 3, 4வது உலைக்கு ஒப்பந்தம்

 

இது தொடர்பாக, அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறியது:

கூடங்குளத்தில் 3 மற்றும் 4ஆவது அணு உலையை நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் மன்மோகன் சி்ங், ரஷ்யா செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழக, கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமலும், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள அணுஉலைகளில் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அணு உலையில் உற்பத்திக்கான தேதியை பலமுறை அறிவித்தும், அறிவித்தபடி உற்பத்தியே தொடங்கவில்லை.

கூடங்குளம் அணு உலைத் திட்டமே தோல்வியில் உள்ள நிலையில் 3ஆவது மற்றும் 4ஆவது உலைகளுக்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரஷ்யாவுக்கு வரும் 20ஆம் தேதி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு கூடங்குளம் அணு உலை திட்டம் தொடர்பாக அடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். பிரதமரின் இந்த முடிவுக்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

2-வது அணு உலையில் விரைவில் முதல் கட்ட சோதனை : கூடங்குளம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்ததையடுத்து அதில் மின் உற்பத்திற்கான முதல் கட்ட சோதனை விரைவில் நடத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதலாவது அணுஉலை கடந்த 13-ந்தேதி செயல்பட தொடங்கியது. ரியாக்டரில் வெப்ப நிலையை படிப்படியாக அதிகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

1200 கிலோ வாட் வெப்பநிலை எட்டியதும் இன்னும் 2 வார காலத்திற்குள் அதில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு விடும்.

இதற்கிடையே 2-வது அணுஉலையில் நடைபெற்று வந்த மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து அங்கு மின் உற்பத்திற்கான முதல்கட்ட சோதனை விரைவில் நடத்தப்படும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

முதல் அணுஉலையில் உள்ளது போலவே 2-வது அணுஉலையிலும் 163 எரிபொருள் கோல்கள் உள்ளன. இவை அனைத்திலும் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு விட்டன.

அதில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

இதையடுத்து பல்வேறு சோதனைக்கு பின்னர் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும்.

முதலாவது அணுஉலை வெற்றிகரமாக செயல்பட காரணமாக இருந்த அனைத்து விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நேற்று அணுஉலை நிர்வாகம் சார்பில் ஒரு கிலோ இனிப்பு வழங்கப்பட்டன.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?