Dinaithal - தினஇதழ்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

விழுப்புரம்: கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்வரை அவதூறாக பேசியதாக பாமக., நிறுவனர் ராமதாஸ் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் வரும் ஜூலை 4 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராமதாசுக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாமக., தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி; கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளன:ராமதாஸ்

பாமக., தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி; கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள்
வன்முறையை கட்டவிழ்த்துள்ளன:ராமதாஸ்

பாமக., நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வடக்கு மாங்குடி கிராமத்தில் தேர்தல் நாளன்று பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதைக் குறைவாகப் பேசியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி சம்பந்தமே இல்லாத அப்பாவி இளைஞர்கள் உள்ளிட்ட 25 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

வன்னியர்கள் வாழும் பகுதிகளில் இரவு நேரங்களில் நுழையும் காவல் துறையினர் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

காட்டுமன்னார்குடி, சோழத்தரம் போன்ற பகுதிகளில் இதேபோல் நடந்த மோதல்களிலும் வன்னிய சமுதாயத்தினரே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தாக்கியவர்களை விட்டு பாதிக்கப்பட்ட வன்னியர்களையே காவல்துறை கைது செய்துள்ளது.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடி பகுதியில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் எடுத்துசென்ற அ.தி.மு.க.வினரை தடுத்ததற்காக பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதியமான் கோட்டை என்ற இடத்தில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை தடுக்க முயன்ற பா.ம.க.வினரை அந்த ஊர் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். அது மட்டுமின்றி அப்பாவி பா.ம.க.வினர் 3 பேரை கைது செய்திருக்கிறார். பென்னாகரத்திலும் இருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நெமிலி, ஆரணி தொகுதியில் நடுக்குப்பம், அவ்வையார் குப்பம் ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்னியர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக நியாயம் கேட்கச் சென்ற வன்னியர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உள்ளூரில் வாக்களிக்க வந்த சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றும் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாழாகியிருக்கிறது.


மக்களவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதால் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் பா.ம.க.வினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன.

தோல்வி பயம் காரணமாக இவ்வாறு செய்வது வாக்களித்த மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, வட மாவட்டங்களில் நிகழும் வன்முறைகளை தடுப்பதுடன், அது குறித்து நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’

என்று அவர் கூறியுள்ளார்.


 

பாமக., தேர்தல் அறிக்கை :

பாமக., தேர்தல் அறிக்கை :


பாமக., தேர்தல் அறிக்கை :

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

சமூக நீதியும், சமத்துவமும் நிலைக்க சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இடஒதுக்கீடு விகிதா சாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கருத்தை பா.ம.க. அடியோடு எதிர்க்கும்.மைப்பு சார்ந்த தனியார் துறைகளில் சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

கல்வி, வேலை, தொழில் தொடங்க உதவி, அரசின் ஒப்பந்தங்களில் பங்கு உள்ளிட்ட அனைத்திலும் ஒவ்வொரு சாதியினருக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பின்தங்கியவர்களில் முன்னேறியவர்கள் என்ற கருத்தை நீக்க வேண்டும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி எனப்படும் பொதுப்பள்ளி முறையை முழுவீச்சில், முழு அளவில் செயல்படுத்தப்பட பா.ம.க. பாடுபடும்.

அனைவருக்கும் முழுமையான நலவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.

பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.

ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வுகள் நடத்த முயற்சிக் கப்பட்டால், அதனை பா.ம.க. எதிர்க்கும். எந்த ஒரு வடிவடத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்.


மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்.

விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும்.

உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம்.


அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலைகளை முற்றிலுமாக மூடவும், இனி புதிதாக அணு உலைகள் தொடங்குவதை முற்றிலுமாக கைவிடவும், இந்தியாவும் தமிழ்நாடும் அணுசக்தி இல்லாத நாடாக விளங்கவும் பா.ம.க. குரல் கொடுக்கும்.

தனிநபர்களுக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வரையிலான வருவாய்க்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும். மகளிருக்கு 20 விழுக்காடும், மூத்தக் குடிமக்களுக்கு 25 விழுக்காடும் கூடுதல் வருமானவரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்.

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம்.

பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை என்பது பா.ம.க.வின் நிலைப்பாடாகும். ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்.

தனிநபர்களுக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வரையிலான வருவாய்க்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும். மகளிருக்கு 20 விழுக்காடும், மூத்தக் குடிமக்களுக்கு 25 விழுக்காடும் கூடுதல் வருமானவரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்.

தனி நபர்களின் சேமிப்பு மீது ரூ.2 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும்.

சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்.

ஆயுள் காப்பீடு சேவை வரி ரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்.

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்.

குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானர்களின் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்.

இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீ ழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.

ஓட்டு விற்பனை என்பது அரசியலை பிடித்த புற்று நோய். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் இழிசெயல் ‘அனைத்து ஊழல்களின் தாய்’ என்ற அழைக்கப்படுகிறது. கருப்புப் பணத்தையும், பெரும் ஊழல்களையும், இயற்கை வளக் கொள்ளையையும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் ஊக்குவிக்கின்றன. இதை அகற்ற பாடுபடுவோம்.

ENGLISH SUMMARY

PMK RELEASED THERE ELECTION MANIFESTO

நாகை பாமக.,  வேட்பாளர் இன்று மனுத்தாக்கல்

நாகை பாமக., வேட்பாளர் இன்று மனுத்தாக்கல்

நாகை மக்களவை பாமக., வேட்பாளர் வடிவேல் ராவணன் இன்று பகல் மனுத் தாக்கல் செய்தார். அவர், மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளித்தார்.

மதிமுக., மாவட்டப் பொறுப்பாளர் முப்பால், தேமுதிக., பொறுப்பாளர் பாலாஜி, பாஜக பொறுப்பாளர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்த பாமக., எம்.எல்.ஏ.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்த பாமக., எம்.எல்.ஏ.

பா.ம.க. வின் வேலூர் மாவட்ட அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ம.கலையரசு இன்று காலை முதல்வரைச் சந்தித்து தொகுதி சார்பான மனு ஒன்றினை அளித்தார்.

இதுவரை தேமுதிக., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்வரைச் சந்தித்து தொகுதி தொடர்பான மனு கொடுப்பதாகக் கூறி, அதிமுக., பக்கம் சாய்ந்து வந்தனர். இப்போது அந்தக் கலாசாரம் பாமக.,விலும் பரவியுள்ளது.

English summary

pmk mla meets jayalalitha

கொலை வழக்கிலிருந்து  பாமக நிறுவனர் ராமதாஸ் விடுதலை


திண்டிவனத்தில் நிகழ்ந்த கொலை வழக்கிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுதலை யானதும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுவுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திண்டிவனத்தில் நிகழ்ந்த ஒருகொலை தொடர்பான வழக்கில் செங்கல்பட்டு முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடுவண் புலனாய்வுப் பிரிவு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.

நானும், எனது மகன் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மருமகன் பரசுராமன், பெயரன் மருத்துவர் பிரித்தீவன் ஆகியோரும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து எங்களின் பெயரை நீக்குவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

திண்டிவனத்தில் நடந்த கொலையில் எனக்கோ அல்லது எனது கட்சியினருக்கோ எந்த தொடர்பும் இல்லைஆனால், என் மீது பழி சுமத்தினால்தான் அரசியலில் வளர முடியும் மேலிடத்தைக் கவர முடியும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் திட்டமிட்டு என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வைத்தார்.

இதை விசாரித்த காவல்துறை எனக்கும், அன்புமணி உள்ளிட்டோருக்கும் இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, எங்களின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்கினர்.

அதன்பிறகும் அரசியல் உள்நோக்கத்துடனும், அ.தி.மு.க. மேலிடத்தின் தூண்டுதலாலும் இந்த வழக்கை சி.பி.ஐ. மூலம் மறு விசாரணை செய்ய வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சி.வி.சண்முகம் வழக்குத் தொடர்ந்தார்.சி.பி.ஐ. விசாரணையின் முடிவில் தான் நானும் மற்றவர்களும் இவ்வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறோம்.


திண்டிவனம் கொலை தொடர்பாக என் மீது பழி சுமத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான 7 ஆண்டுகளில் நான் அடைந்த வேதனையையும், அனுபவித்த மன உளைச்சலையும் வார்த்தைகளில் வரையறுக்க முடியாது.

இப்போது இந்த வழக்கிலிருந்து நானும், அன்புமணி உள்ளிட்டோரும் நீக்கப்பட்டு விட்டோம் என்ற செய்தியை, 9 நாட்களாகிவிட்ட பிறகும் ஊடகங்கள் வெளியிடவில்லை.

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் குற்றச்சாற்றுகளையும் சுமத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வெகுவிரைவில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஐகோர்ட்டில் பாமக.,விற்கு எதிராக வழக்கு:

ஐகோர்ட்டில் பாமக.,விற்கு எதிராக  வழக்கு:

ஐகோர்ட்டில் பாமக.,விற்கு எதிராக வழக்கு:

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் பாமக தனது வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரம் செய்து வருவதாக பாமக.,விற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாமக.,கட்சியின் இந்த செயல் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு எதிரானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் - ஜனவரி 09ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

English Summary

case file in high court against PMK

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆகிறது : பா.ம.க.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது : பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். தனித்து தேர்தலை சந்திக்க பா.ம.க. தயாராகி வருகிறது. வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர்.

5-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் முனைப்புடன் பணிகளை தொடங்கி விட்டனர். ஒத்த கருத்துடைய சமூக அமைப்புகளை தங்கள் அணியில் சேர்த்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வட்ட வாரியாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. சென்னையில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியை பா.ம.க. குறி வைத்துள்ளது.

ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் பொறுப்பாளராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். பகுதிவாரியாக பிரசார வியூகம் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

வேளச்சேரி பகுதியில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சகாதேவன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், மாநில துணை தலைவர் ஈகை தயாளன், பகுதி தலைவர் சிவகுமார் உள்பட பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஏ.கே.மூர்த்தி, தேர்தல் பணியை உடனே தொடங்குங்கள். வீடு வீடாக சென்று பா.ம.க. கொள்கை, சமூக முன்னேற்றத்துக்கு ஆற்றி உள்ள பணிகள் பற்றி எடுத்து சொல்லி ஆதரவு திரட்டுங்கள் என்றார். முடிவில் வேலாயுதம் நன்றி கூறினார்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேரும் பா.ம.க., தே.மு.தி.க.வினர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் மூன்றாயிரம் பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேரும் விழா மறைமலை நகரில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகர் விழாவில் பங்கேற்கிறார். மேலும் கட்சியில் இணைபவர்கள் ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.

இதற்காக மறைமலைநகரில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை :

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ம.க. துணைத் தலைவருமான து.மூர்த்தி மற்றும் தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் தி.மு.கழகத்தில் இணையும் மாபெரும் விழா மறைமலைநகர் அண்ணா திடலில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் து.மூர்த்தி, தே.மு.தி.க. பிரமுகர் தமிழ்வேந்தன் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் தி.மு.க.வில் இணைகிறார்கள்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என அவர் கூறினார் .

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி தி.மு.க.வில் இணைந்தார்

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை :

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மாலை அவரது இல்லத்தில் காஞ்சி மாவட்ட பா.ம.க. மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ து.மூர்த்தி தலைமையில் 25–க்கும் மேற்பட்ட கிளை, வார்டு பா.ம.க. நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க.வில் இணைந்த மற்ற பா.ம.க. நிர்வாகிகள் பட்டியல்  :

8–வது வார்டு செயலாளர் ரமேஷ், 6–வது வார்டு தலைவர் தங்கராஜ், 7–வது வார்டு இளைஞர் அணிச் செயலாளர் விமல்ராஜ், 21–வது வார்டு செயலாளர் ரமேஷ், 21–வது வார்டு தலைவர் ஏழுமலை, 21–வது வார்டு துணைச் செயலாளர் வீரன், 21–வது வார்டு துணைத்தலைவர் அருள், 21–வது வார்டு இளைஞர் அணிச் செயலாளர் ரகு, 21–வது வார்டு இளைஞர் அணித் தலைவர் சரவணன், 16–வது வார்டு செயலாளர் ராம்குமார், 16–வது வார்டு தலைவர் ஞானஒளி, 16–வது வார்டு இளைஞர் அணிச் செயலாளர் பிரபு, 8–வது வார்டு இளைஞர் அணி திருவேங்கடம், 1–வது வார்டு இளைஞர் அணி சுரேஷ்.

திருப்போரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த புதுப்பாக்கம் கிளைச் செயலாளர் ராஜேந்திரன், புதுப்பாக்கம் கிளைத் தலைவர் ஏழுமலை உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது காஞ்சிபுரம் மாவட்டக் கழகக் செயலாளர் தா.மோ.அன்பரசன், மறைமலை நகர் நகரச் செயலாளர் ஜெ.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்..

பக்கம் 1 / 2

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?