Dinaithal - தினஇதழ்

திருவள்ளூர் விபத்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லக்ஷம் - முதல்வர் அறிவிப்பு

திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அலமாதி-1 கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கின் சுற்றுச் சுவர் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று (6.7.2014) அதிகாலை சுவரினை ஒட்டி அமைந்திருந்த குடிசை வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், அந்தக் குடிசைகளில் தங்கியிருந்த 10 கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இது பற்றி இன்று காலை அந்த கிராமத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் துயரம் சம்பவம் குறித்து எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பால்வளத் துறை அமைச்சர் ஏ.மூர்த்தி மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஞ.வேணுகோபால் ஆகியோருக்கு நான் ஆணையிட்டுள்ளேன்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், அவசர மீட்பு ஊர்திகளுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், தேவையான மருத்துவ அலுவலர்கள் ஆகியோரை உடடினயாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நாகராஜ் என்பவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் ஆணையிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அரசு செலவில் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் நான் ஆணையிட்டுள்ளேன். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

நெல்லை அருகே விபத்து: 30 பேர் காயம்  2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளன.

நெல்லை அருகே விபத்து: 30 பேர் காயம் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளன.

இன்று நெல்லை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 30 பேர் காயமுற்றனர். சங்கரன்கோவில் செல்லும் ராமையன்பட்டி ரோட்டில், இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 30 பேர் காயமுற்றனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளன.

Published inநெல்லை
மதுரை அருகே பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

மதுரை அருகே பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

மதுரை :மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கிச் சென்ற அரசு பஸ், எம்.மீனாட்சிபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

English Summary

bus accident near madurai 15 injured

Published inமதுரை
கிருஷ்ணகிரியில்  சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் பலி: உறவினர்கள் மறியல்

கிருஷ்ணகிரியில் சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் பலி: உறவினர்கள் மறியல்

கிருஷ்ணகிரியில் சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்ச்செல்வன் என்பவர் கல்லூரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த குழாய் மீது மோதி கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த தனியார் பேருந்து தமிழ்ச்செல்வன் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

English Summary

accident in krishnagiri college boy dead

Published inசேலம்
மும்பையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலி

மும்பையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலி

மும்பை அருகே தானேவில் அரசு பயணிகள் பேருந்து வித்தல்வாடியிலிருந்து அகமத் நகர் நோக்கி 40பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்த பேருந்து தானே உள்ள மல்ஸ்கெஜ் என்ற இடத்தின் அருகே வந்தபோது, எதிரே வந்த வேன் ஒன்று அதன் மீது மோதியது.


இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகிலுள்ள 250 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பெண்கள் உட்பட 27 பேர் பலியானதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து இதுவரை 17 பேர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியகிவுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

ஆந்திரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

மகராஷ்டிரா மாநிலம் நான்டட் பகுதியில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த நான்டட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நான்டட் எக்ஸ் பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள கொத்தசேவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 3.45 மணியளவில் .விபத்து ஏற்பட்டது இவ்விபத்தி்ல் 2 குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,படுகாயமடைந்த 9க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அனந்தபூர் மற்றும் தர்மாவரத்தி்ல உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏறபட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு்ள்ளதாக கூறப்படுகிறது. 5-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை நடைபெற்ற தீ விபத்து அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


 

கல்லுரி பேருந்து விபத்து! 2 மாணவிகள் பலி

கல்லுரி பேருந்து விபத்து! 2 மாணவிகள் பலி

கல்லுரி பேருந்து விபத்து! 2 மாணவிகள் பலி

நாமக்கல் உள்ள  தனியார் என்ஜினீயரிங்  கல்லூரியில் திருச்சி மாவட்டம் துறையூர், முசிறி, தா.பேட்டை மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இன்று காலை  துறையூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சொந்தமான பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
அப்போது நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி சென்ற சரக்கு லாரி கல்லூரி பஸ் மீது நேருக்கு நேராக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சின் முன்பகுதி  சிதைந்து போனது. பஸ்சில் முன்வரிசையில் அமர்ந்து பயணம் செய்த மாணவிகளில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற தா.பேட்டை போலீசார் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவிகளை மீட்டு துறையூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல்  சவுமியா,  புவனா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்வர் கார் விபத்து

முதல்வர் கார் விபத்து

முதல்வர் கார் விபத்து

நேற்று இரவு சாந்தோமில் புதுவை முதல்வர் கார் மீது ஒருவர் கார் மோதி விபத்து ஏற்படுத்தியதால் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
அவர்மீது குடிபோதையில் வாகனம் ஒட்டியது, அதிவேகம், கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் முதல்வர் ரங்கசாமி கார் சேதமடைந்தது. விபத்தில் ரங்கசாமி மற்றும் பாதுகாவலர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அரசு பேருந்துகள் எதிர் எதிரே மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் பலி

அரசு பேருந்துகள் எதிர் எதிரே மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் பலி :

ஜெயங்கொண்டம் அருகே மீன் சுருட்டி நெல்லி தோப்பு பகுதியில் இன்று மதியம் சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து காட்டு மன்னார் குடிக்கு சென்ற அரசு பேருந்து  மீது பயங்கரமாக மோதியது. இதில் இடுபாடுகளுக்குள் சிக்கி 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.

மேலும் பேருந்தில்  பயணம் செய்த 40–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மீன் சுருட்டி போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இரண்டு பஸ்களின் டிரைவர்கள் காயத்துடன் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

English Summary:

Motikkontat 3 children killed in front of the bus :

Nelly jeyankontam grove area near the fish rolled on the bus in the afternoon and had a Pattukkottai from Chennai . View from the Mannar jeyankontat drinking on the bus collided violently . The itupatukalukkul be miserable stuck 3 children died on the spot .

On the bus and the 40 - and more were wounded . Bring them to the nearest government hospital, police sent rolled in fish .

ஜீப் மீது பஸ் மோதி 16 பேர் பலி: கர்நாடகாவில் பரிதாபம்

கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 16 பேர் பலியாகினர்.

குல்பர்கா-பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜிந்தகி என்ற இடத்தில், ஜீப் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த அனைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

-தின இதழ் செய்தி குழு

பக்கம் 1 / 2

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?