Dinaithal - தினஇதழ்

சென்னையில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி  பயணம்: ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர்

சென்னையில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி  பயணம்: ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர்


சென்னை மாநகர பஸ்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று நடத்திய திடீர் ஆய்வில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக  ரூ. 91 ஆயிரத்து 150 வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களைப் பிடிப்பதற்காக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம்.

 போக்குவரத்துக்கழக ஆய்வாளர்கள் முக்கிய வழித் தடங்களில் நேற்று தொடர் டிக்கெட் சோதனையிலும் ஈடுபடுவர்.

இந்த நிலையில் மாநகரப் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் தலைமையில் பணிமனை மேலாளர்கள், 200 கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களைக் கொண்டகுழு சென்னை மாநகரம் முழுவதும் 82 இடங்களில் நேற்று திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.

மாநகர பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்த காலை 8 மணி முதல் 11 மணி வரையும் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதில்  டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 91 ஆயிரத்து 150 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.










 

நாடாளமன்ற தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல 500 சிறப்பு பஸ்கள்

நாடாளமன்ற தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல 500 சிறப்பு பஸ்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளமன்ற தேர்தல் நாளை  நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்து அரசு போக்குவரத்து கழகங்களை கேட்டு கொண்டது.

அதனை அடுத்து  சிறப்பு பஸ்கள் சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று மாலை முதல் இயக்கப்படுகிறது. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்களும், மற்ற போக்குவரத்து கழகத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்களும் விடப்படுகிறது.

English summary

500 special buses have been operated for elections

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?