Dinaithal - தினஇதழ்

சென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை


சென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை


அம்பத்தூர் புழல் ஜீவா நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரது மகள் மணிமேகலை(17).இவர் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.இவரும் மூலக்கடை திருவீதி அம்மன் கோவிலைச் சேர்ந்த மோகன் (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று காலை 10–ம் வகுப்பு தேர்வு வெளிவந்தபோது மதிப்பெண் பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்ற மணிமேகலை பின்னர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை திருமுல்லைவாயல் – அண்ணனூர் ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் வாலிபரும் இளம்பெண்ணும் தலை துண்டான நிலையில் இறந்து கிடந்ததை அறிந்த பெரம்பூர் ரெயில்வே போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் விசாரணையில் பிணமாக கிடந்த இருவரும் காதல் ஜோடியான மணிமேகலை – மோகன் என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவருடைய காதலுக்கும் பெற்றோர்கள் சம்மதித்துவிட்ட நிலையில் எதற்காக தற்கொலை செய்தார்கள் என தெரியவில்லை.இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.







 

சென்னை மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

சென்னை மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது


சென்னை காசிமேடு, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டில் வசித்துவரும் தொழிலாளி சண்முகம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தாகக் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து காசிமேடு போலீசில் மாணவி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்து. இதனையடுத்து சண்முகத்தை கைது செய்த போலீஸார் தொடந்து விசாரித்து வருகின்றனர்.



 

Published inசென்னை
ஒரு தலை காதல் விபரீதம் : சென்னையில் திருமணமான பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை


ஒரு தலை காதல் விபரீதம் : சென்னையில் திருமணமான பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை

சென்னை போரூர் ஏரியில் கடந்த சனிக்கிழமை இரவு துண்டு, துண்டாக வெட்டபட்ட நிலையில் கை, கால்கள் மிதப்பதை கண்ட பொதுமக்கள் போரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மிதந்து கிடந்த கை, கால்களுக்கு அருகே கோணிப்பையை கண்டெடுத்த போலீஸார் அதை பிரித்து பார்த்த போது அதில் 25 வயது மதிக்க தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின் இவற்றை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த விசாரணையில் இறந்து கிடந்த பெண் சென்னை, நெசப்பாக்கம், அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் மனைவி ரேகா வயது (25) என்பதும், இவர் கடந்த 1 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்து கொலைக்காண காரணம் குறித்து தீவிர விசாரணை செய்துவந்தனர்.

இதில் கொலையான ரேகா சென்னை கிண்டியில் உள்ள தனியார் கால் சென்டரில் வேலை செய்து வந்தார். இதே நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்த மாதவரம், சீத்தாபதி தெருவை சேர்ந்த சாம்சன் வயது (25) என்பவர் ரேகாவின் திருமணத்திற்கு முன்பே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரேகா தான் காதலித்து வந்த ஸ்ரீராம் என்பரை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த சாம்சன் கடந்த 1 ஆம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ரேகாவை கடத்தி கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி உடலை கோணிப்பையில் வைத்து போரூரில் உள்ள ஏரியில் வீசி சென்றது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரேகாவை கொலை செய்து தலைமறைவாக உள்ள சாம்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

English summary

a newly married girl have been murdered ;one side love

சென்னை பெருங்குடியில் பட்டப்பகலில் பெண் மென்பொறியாளர் படுகொலை


சென்னை பெருங்குடியில் பட்டப்பகலில் பெண் மென்பொறியாளர் படுகொலை

சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே பெண் மென்பொறியாளர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் வைஷியா இன்று காலை பெருங்குடி ரயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வெங்கடாசலபதி என்பவர், வைஷியாவை வழி மறித்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், அவர் பலத்த காயம் அடைந்த வைஷியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வெங்கடாசலபதியும் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடாசலபதியை காவல்துறையினர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதலால் இந்த கொலை நடந்ததா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

English summary

software engineer was brutally murdered today morning

'வாட்ஸ்அப்'பில் கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்த மனைவி!

'வாட்ஸ்அப்'பில் கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்த மனைவி!

கேரள மாநிலத்தில் ஆற்றகல் அருகே மன்னாபாகம் என்ற பகுதியில் வசிப்பபவர் ஓமணா(67) இவரது மகள் விஜிஸ் (வயது40). விஜிஸ் மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதிகளுக்கு சுவஸ்திகா (4)   என்ற குழந்தை உள்ளது.

அனுசாந்தி தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  அதே நிறுவனத்தில் பணியாற்றும் மேத்யூ(வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவருக்ம் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்  பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில்  நினோ மேத்யூ, அடிக்கடி தனது காரில் அனுசாந்தியை அவரத  வீட்டிற்கு அழைத்து சென்று இறங்கிவிட்டுள்ளார்.

இதனை கண்ட அனு சாந்தியின் கணவர் விஜிஸ் மற்றும் மாமியார் ஓமணா  கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால் அனுசாந்தி தனது கள்ளத் தொடர்பை துண்டிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விஜிஸ், நினோ மேத்யூவிடம் சென்று தனது மனைவியுடன் பேசக்கூடாது என்று கண்டித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.  இதில் கடும் ஆத்திரமடைந்த வினோ மேத்யூ கொலை வெறியுடன்  விஜிஸ் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மேலும் விஜிஸின் அலறல் சத்தம் கேட்டு அவரது அம்மா ஓமாணா தனது பேத்தியுடன் ஒடிவந்தார். அப்போது ஓமணா மற்றும் சுவஸ்திகாவை  கத்தியால் குத்திவிட்டு வினோ மேத்யூ தப்பி ஓடடிவிட்டார். படுகாயம் அடைந்த ஓமணாவும், சுவஸ்திகாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஜிஸ் ஆற்றிங்கல் மருத்துவனைமயில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நினோ மேத்யூவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள்  காவல்துறையினரை  திடுக்கிடவைத்தன.

 இது குறித்து காவல்துறை கூறுகையில், அனுசாந்தி கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த தனது குடும்பத்தார் அனைவரையும் கொன்றுவிட நினைத்துள்ளார். இதற்காக தனது கள்ளக்காதலன் வினோ மேத்வை தூண்டி விட்டு உள்ளார். கொலைகான திட்டம் குறித்தும், எப்படி வீட்டை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட தகவல்களை  அனுசாந்தி தனது கள்ளக்காதலனுக்கு மொபைல் 'வாட்ஸ்அப்பில்'  அனுப்பியுள்ளார். இதற்காக வீட்டின் படங்களையும், ஒவ்வொரு அறையையும் செல்போனில் போட்டோ எடுத்து அதை வாட்ஸ் அப் மூலம் நினோமாத்யூவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 மேலும் தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல் கொலை செய்துவிட்டு விட்டு தப்பியோடிது போன்ற திட்டததை ஜோடிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. இந்நிலையில் தொடர்ந்த விசாரணை நடத்திய காவல்துறை அனுசாந்தியையும் கைது செய்தனர்.

நினோமேத்யூவிற்கு திருமணம் ஆகி 4 வயதில் குழந்தை உள்ளது. நினோமேத்யூவின் நடவடிக்கை பிடிக்காமல்  அவரது மனைவி தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.

 

 

சக்திமில்லில் பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கு: 3 பேருக்கு தூக்கு

சக்திமில்லில் பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கு: 3 பேருக்கு தூக்கு

கடந்த ஆக.22ம் தேதி  2013ம் ஆண்டு சக்திமில்லில் நடந்த பெண் பத்திரி்கையாலர் பாலியல் பலாத்கார வழக்கில், சம்பந்தப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் என மும்பை செசன்ஸ்  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முக்கிய குற்றவாளிகளான  காசிம் பெங்காளி, விஜய் ஜதாவ், முகம்மது சலீம் அன்சாரி ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.

மேலும் நான்காவது நபருக்கு அவர் ஆயுள் உள்ள வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

English Summary

women repoter rape case :3 accused got life sentence

கணவன் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக மனைவி புகார்

கணவன் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக மனைவி புகார்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலபா பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண் ஒருவர் தனது கணவர் மீது காம்தேவி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2009–ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள் முதல் என் கணவருடைய குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் எனது கணவர் என்னை மிகவும் ஆபாசமாக புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு செல்போனில் அனுப்பி உள்ளார்.

எனவே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரித்துவருகின்றனர்.

அதிமுக., வழக்குரைஞருக்கு அறிவாள் வெட்டு!

அதிமுக., வழக்குரைஞருக்கு அறிவாள் வெட்டு!

சீர்காழி சேர்ந்தவர் வழக்கறிஞர் தியாகராஜன் அதிமுக.,வை சேர்ந்த இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் குறுக்கே ஓடியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த அவர் சிறுவனின் தாயிடம் கண்டித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மணிவண்ணன் என்பவர் தியாகராஜனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் மணிவண்ணன் வழக்குரைஞரை தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பலத்த காயம் அடைந்த வழக்குரைஞர் தியாகராஜன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து மணிவண்ணனை தேடி வருகின்றனர்.

English summary

admk advocate was attacked

சேலம் அருகே  மது (சரக்கு) பங்கு பிரிப்பதில் கணவனும் மனைவி  சண்டை மனைவி வெட்டிக் கொலை!

சேலம் அருகே மது (சரக்கு) பங்கு பிரிப்பதில் கணவனும் மனைவி சண்டை மனைவி வெட்டிக் கொலை!

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள  பெலாக்காடு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன்(45). இவரது மனைவி பெயர் வெள்ளச்சி(42)

கணவன்,மனைவி இருவரும் சேர்ந்தே தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டில் மது அருந்த ஆரம்பித்தனர்.

அப்போது மனைவி வெள்ளச்சிக்கு மதுவைக் குறைத்து தண்ணீரை அதிகமாக  ஊற்றி விட்டாராம் வெள்ளையன்.இதனை கண்ட வெள்ளச்சி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சண்டை முற்றவே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அப்போது வெள்ளையன் அரிவாளை எடுத்து மனைவி வெள்ளச்சியை வெட்டிக் கொன்றார்.

போதை தெளிந்து மறுநாள் விஏஓ மூலமாக வெள்ளையன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தீபாவளியையொட்டி 3 நாட்களில்: ரூ.360 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை, 30 கொலைகள், 2 ஆயிரம் புகார்கள்

தீபாவளியையொட்டி 3 நாட்களில்: ரூ.360 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை, 30 கொலைகள், 2 ஆயிரம் புகார்கள்

தீபாவளியையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை தினத்தில் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை முயற்சி மற்றும் விபத்துகள் அதிகமாக நடந்தன. இதற்கு மதுபானமே முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் மதுபான கடைகளை அடைத்தால் நல்லது என்று போலீசார் புலம்பி வருகின்றனர்.
கடந்த 2ம் தேதி சனிக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டது. இதற்காக முதல்நாளே பட்டாசுகள் வெடிக்க போலீசார் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.

ரோந்து பணிகளையும் முடுக்கி விட்டனர். தீபாவளி சனிக்கிழமை என்பதாலும், அடுத்த நாள் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மதுபானம் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் ரூ.360 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த விற்பனையால் அரசு அதிகாரிகள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அந்த 3 நாட்கள் மட்டும் மாநிலம் முழுவதும் கொலை மற்றும் சாதி மோதல்கள், வன்முறை, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

சென்னை துரைப்பாக்கத்தில் அண்ணனை தம்பி குடிபோதையில் வெட்டிக் கொலை செய்தார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையிலும் குடிபோதையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சென்னையில், 3 நாட்களில் மட்டும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலான அழைப்புகள், குடிபோதையில் தகராறு தொடர்பானது. 50க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டிஜிபி அலுவலகம் அருகே குடிபோதையில் காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவன், 3 பேரை ஏற்றிக் கொன்றான். திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் மட்டும் 12 கொலைகள் 3 நாட்களில் நடந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 63 விபத்துகள் ஏற்பட்டன. 17 குடிபோதை தகராறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம் வீராணம் பள்ளிப்பட்டியில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் அடித்தடியில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டத்தில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேலம் ஊரக பகுதியில் 5 வழக்குகளும், ஓமலூரில் 4 வழக்குகளும், மேட்டூரில் 4 வழக்குகளும் வாழப்பாடியில் ஒரு வழக்கும் என மொத்தம் 14 வழக்குகளும் பதிவானது.

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி யி10 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிபோதையில் தகராறு செய்து காவல்நிலையம் வரை சென்றுள்ளன. சேந்தமங்கலத்தில் இரு கோஷ்டியினரிடையே பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, ஆயில் பட்டி, ராசிபுரத்தில் சில இளைஞர்கள் போதையில் வயதான பெரியவர்கள் மீது வெடியை கொளுத்திப்போட்டு விட்டு தலைமறைவாகிவிட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி 17 அடிதடி வழக்குகளில் 22 பேர் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். 3ம் தேதி 6 அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 பேர் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 குடிபோதையில் நடந்த தகராறு ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அடிதடி வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிபோதையில் ரகளை செய்ததாக 10 பேரை கைது செய்யப்பட்டனர். அதேபோல, பழனியில் குடிபோதையில் நடந்த தகராறு காரணமாக இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

நெல்லையில், இரு சாதியினரிடையே மோதல் ஏற்பட்டு 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் 30 கொலைகள் நடந்துள்ளன. 400க்கும் மேற்பட்ட அடிதடி, தகராறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் டெலிபோனில் வந்துள்ளன. போலீசார் சென்று சமாதானப்படுத்தியதால் பல வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. சேலம், திண்டுக்கல், நெல்லை உட்பட 7 மாவட்டங்களில் சாதி மோதல்கள் நடந்தன.

இந்த 3 நாட்களும் போலீசார் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வந்தனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, மது போதைதான் என்று பொதுமக்களும், போலீசாரும் கூறுகின்றனர். இதனால், பண்டிகை காலங்களில் மது பானக் கடைகளை மூடிவிட்டால், கொலை, வன்முறைச் சம்பவங்களை தடுத்து விடலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

பக்கம் 1 / 2

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?