Dinaithal - தினஇதழ்

திமுக.வை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழு

திமுக.வை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழு


மக்களவை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள நிலையில், மாவட்ட அளவில் திமுக.,கட்சியை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழுவை கட்சி தலைமை இன்று அமைத்துள்ளது.




 

திமுகவின் பரிதாப நிலை போட்டியிட்ட 40 தொகுதிகளில்: 5 தொகுதிகளில் 3ம் இடம்; 2 தொகுதிகளில் 4ம் இடம்


திமுகவின் பரிதாப நிலை போட்டியிட்ட 40 தொகுதிகளில்: 5 தொகுதிகளில் 3ம் இடம்; 2 தொகுதிகளில் 4ம் இடம்

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளமன்ற தேர்தலில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத திமுக,

விருதுநகர், தருமபுரி திருப்பூர், ஈரோடு, கோவை,  ஆகிய தொகுதிகளில் 3வது இடத்துக்கும், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி தொகுதியில் திமுக 4ம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.

english summary

bad defeat of dmk party

திமுக.,தலைவர் கருணாநிதியுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

திமுக.,தலைவர் கருணாநிதியுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த திமுக.வேட்பாளர்கள் திமுக. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

பா.ஜனதாவிற்கு ஆதரவு தரமாட்டோம்: திமுக அறிவிப்பு!

பா.ஜனதாவிற்கு ஆதரவு தரமாட்டோம்: திமுக அறிவிப்பு!

நாளை நாடாளமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்தியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவுவில்லை என, திமுக. இன்று அறிவித்துள்ளது.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ரத்து செய்ய வேண்டும்: திமுக., தேர்தல் அறிக்கையில் தகவல்

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ரத்து செய்ய வேண்டும்: திமுக., தேர்தல் அறிக்கையில் தகவல்

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஆண்களுக்கு ரூ. 6 லட்சமாகவும், பெண்களுக்கு ரூ. 7.2 லட்சமாகவும் அதிகரிக்க  வலியுறுத்தப்படும், தேசிய அளவில் சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம் என்றும்,என்றும்  திமுக. மக்களவை தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 100 தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை திமுக., தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.

அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

நாடளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்கள் அதிக அளவில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்

கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு உரிய இடம் வழங்க வேண்டும்.
தேசிய அளவில் சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம்.

மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்படும்.

குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஏற்க வலியுறுத்துவோம்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்த தொடர் முயற்சி எடுக்கப்படும்.

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இணை ஆட்சிமொழியாக வலியுறுத்தப்படும்.

மரணத்தண்டனையை நீக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தப்படும்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும்.

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஆண்களுக்கு ரூ. 6 லட்சமாகவும், பெண்களுக்கு ரூ. 7.2 லட்சமாகவும் அதிகரிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.

நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் நலப்பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தப்படும்.

விவசாய கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமல்படுத்த வலியுறுத்தப்படும்.

சென்னையில் ராயபுரம் ரயில் முனையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

தூக்குத் தண்டனையை ஒழிக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

கச்சத்தீவு மீட்பு மற்றும் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ரத்து செய்ய வேண்டும்.

கொப்பரைத் தேங்காய், பச்சைத் தேயிலைக்கு கட்டுப்படியாகக் கூடிய ஆதார விலை வேண்டும்.

நிதிகளை தேசிய மயமாக்குதல், நதிகள் இணைப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம்.

மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் எரிவாயு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

இடஒதுக்கீடு 50 சதவீதம் இருப்பதை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வற்புறுத்துவோம்.

English Summary

dmk election manifesto


வரும் பிப்.20 முதல் மார்ச் 3 வரை திமுக., நேர்காணல்

லோக்சபா தேர்தல் விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் தேதிகளை அறிவித்தது திமுக.,. பிப்ரவரி 20 முதல் மார்ச் 3 வரை சென்னை அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.

வரும் பிப்ரவரி 20-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு நேர்காணல். ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை தொகுதிகளுக்கு பிப்ரவரி 21-ல் நேர்காணல். பிப்ரவரி 22-ல் சிவகங்கை, கரூர், தஞ்சை, நாகை, திருச்சி, மயிலாடுதுறைக்கு நேர்காணல். பிப்ரவரி 23-ல் பெரம்பலூர், சிதம்பரம், கடலூர், நீலகிரி, பொள்ளாச்சிக்கு நேர்காணல்.
பிப்.25: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்; பிப்.27: சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி.

பிப்.28: ஆரணி, கிருஷ்ணகிரி, வேலூர், தி.மலை,, அரக்கோணம்.
மார்ச் 2: ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்.
மார்ச்.3: வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி.

English Summary

from feb 20 to march 3 dmk interview

திமுக சார்பில் தேர்தல்  கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அறிவிப்பு!

திமுக சார்பில் தேர்தல் கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அறிவிப்பு!

திமுக., பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. தலைமைக் கழகம் குழு அமைத்துள்ளது. அந்த குழுவில்,

மு.க.ஸ்டாலின்  பொருளாளர், தி.மு.க.,
துரைமுருகன்  துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.,
வி.பி. துரைசாமி  துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.,
ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்
பெ.வீ. கல்யாணசுந்தரம் அமைப்புச் செயலாளர், தி.மு.க.,ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

English Summary

dmk has announced members to speak about nego. with alliance parties reg seat sharing















 

திமுக. எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் :பேரவைத் தலைவர் நடவடிக்கை

திமுக. எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் : பேரவைத் தலைவர் நடவடிக்கை

சென்னை :அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக. எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் இன்று அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக. தலைவர் கருணாநிதி பற்றி அதிமுக. உறுப்பினர் மார்க்கண்டேயன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு சென்று முற்றுகையிட்டனர்.

அதிமுக.,வினரின் அவதூறு பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக., உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

சபாநாயகர் அதிமுகவுக்கு ஆதரவாக  ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து  திமுக., உறுப்பினர்கள் அனைவரும்  கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

English Summary

dmk Mla suspended for the full session

அண்ணா அறிவாலயத்தில்திமுக. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

அண்ணா அறிவாலயத்தில்திமுக. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

நாளை வியாழகிழமை சட்டசபை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக, எம்.எல்.ஏ,க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் மற்றும் திமுக, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.

English Summary

dmk mlas meeting started in anna arivalayam

திமுக தலைவர் கருணாநிதி மு.க.அழகிரி சந்திப்பு  பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து


மு.க.அழகிரி இன்று 2வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின் நிருபர்களை சந்தித்த மு.க.அழகிரி.இது குடும்பரீதியிலான சந்திப்பு என்றும் தலைவர் கருணாநிதிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்க வந்தேன். அவர் எனது உடல் நலம் குறித்தும் எனது குடும்பத்தினர் நலம் பற்றியும் விசாரித்தார் என்று கூறினார்.

பக்கம் 1 / 4

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?