Dinaithal - தினஇதழ்

திருவள்ளூர் விபத்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லக்ஷம் - முதல்வர் அறிவிப்பு

திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அலமாதி-1 கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கின் சுற்றுச் சுவர் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று (6.7.2014) அதிகாலை சுவரினை ஒட்டி அமைந்திருந்த குடிசை வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், அந்தக் குடிசைகளில் தங்கியிருந்த 10 கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இது பற்றி இன்று காலை அந்த கிராமத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் துயரம் சம்பவம் குறித்து எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பால்வளத் துறை அமைச்சர் ஏ.மூர்த்தி மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஞ.வேணுகோபால் ஆகியோருக்கு நான் ஆணையிட்டுள்ளேன்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், அவசர மீட்பு ஊர்திகளுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், தேவையான மருத்துவ அலுவலர்கள் ஆகியோரை உடடினயாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நாகராஜ் என்பவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் ஆணையிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அரசு செலவில் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் நான் ஆணையிட்டுள்ளேன். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் உரை:

காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் உரை:

சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றது.

இதில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது காவல் துறையினரின் பொறுப்பு. குற்றங்களை தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு, பேரழிவு நிர்வாகம் மற்றும் பலவிதமான சமூக சட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவை காவல் துறையினரின் பொறுப்பு.

தமிழக காவல் துறையை பொறுத்தவரையில் சவால்களை சந்திக்கும் வகையில் சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை எனது அரசு வழங்கியுள்ளது. அண்மையில் பக்ருதீனும், இரண்டு கூட்டாளிகளும் புத்தூர் அருகே நடந்த வேட்டையில் எத்தகைய உயிரிழப்பும் இன்றி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நானே தனிப்பட்ட முறையில் 260 காவல் துறையினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் முதல் ரூ.15 லட்சம் வரை ரொக்கப் பரிசும், 20 பேருக்கு பதவி உயர்வும் அளித்திருக்கிறேன்.

இதுபோன்ற பரபரப்புமிக்க நடவடிக்கைகள் பத்திரிகைகளில் பிரதான செய்தியாக இடம்பெறுகின்றன. அதே சமயத்தில் அச்சுறுத்தலுக்கு ஆளான முக்கிய பிரமுகர்கள் வருகையின்போதும், சாதி தலைவர்களின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள், முக்கிய கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றின்போது காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, அவை அமைதியாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்பதை நான் அறிவேன். இதில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை நான் அறிவேன். இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு காவலர் மட்டுமின்றி காவல் துறையைச் சேர்ந்த காவல்படையின் நலனில் நான் அக்கறை காட்டி வருகின்றேன்.

இந்த நேரத்தில் எனது முன்னுரிமை குறித்து உங்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன். நீங்கள் 9 லட்சம் பேரை கைது செய்யும்போது, போலீஸ் காவலில் ஒருவர் இறந்தால் புள்ளி விவரத்தின்படி அது சாதாரணமானதுதான். ஆனால், இறந்தவரின் குடும்பத்துக்கு அவர் வெறும் புள்ளி விவரம் அல்ல. காவல் நிலையங்களில் சில கைதுகள் திடீரென உடல் நலம் குன்றிப் போவதும், போலீஸ் காவலில் சிலர் தற்கொலை செய்துகொள்வது போன்ற சம்பவங்கள் குறித்த செய்திகள் வருகின்றன.

குடிமக்களுக்கு அவர்கள் வீடுகளிலும், பணிபுரிந்த வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை போலீசாருக்கு இருக்கும்போது, ஒரு குடிமகன் காவல் நிலைய வளாகத்திற்குள் இறப்பது என்பது சர்ச்சைக்குரியதாகும். காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக்கூத்தாக்கிவிடும்.


புதிய வகையான குற்றங்கள் தற்போது நிகழ்கின்றன. கடும் குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்வது மட்டும் போதாது, அவர்களை ஜாமீனில் விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். விரைவில் குற்றப்பத்திரிகை கொடுக்கப்படவேண்டும். மேலும் விசாரணையை விரைந்து முடிக்க செய்ய வேண்டும்" என அறிவுரை கூறினர் .

முதல்வர் அசையும்  சொத்துகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு!

முதல்வர் அசையும் சொத்துகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு!

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அசையும் சொத்துக்களை வரும் 21ஆம் தேதிக்குள் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா வழக்கு தொடர்பான அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தி.மு.க. எம்.பி. தாமரைக்கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜான்குன்ஹா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தங்கம், வைர நகைகள், வாகனங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை வரும் 21ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சாதி மத மோதல்களை துண்டினால் கடுமையான நடவடிக்கை-முதல்வர் எச்சரிக்கை

சாதி மத மோதல்களை துண்டினால் கடுமையான நடவடிக்கை-முதல்வர் எச்சரிக்கை

மாவட்ட  ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின்  3 நாள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

சாதி, மத கலவரங்கள், இடதுசாரி தீவிரவாதம் எதுவும் நிகழாத வண்ணம் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

சாதி மத மோதல்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா எச்சரித்தார்.

கச்சத் தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முதல் நாளில் அதிகாரிகளின் ஒருங்கிணைந்து கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், அறிமுகம் செய்யும் உள்ள திட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை உயர் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்

ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் அளித்தது..இந்த புகாரின் அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேர்தல்  ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்க்கு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுக-காங்கிரசும் சதி செய்து மின் தட்டுபாட்டை உருவாகுகின்றனர்-முதல்வர்

திமுக-காங்கிரசும் சதி செய்து மின் தட்டுபாட்டை உருவாகுகின்றனர்-முதல்வர்   

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு தி.மு.க., - காங்கிரசின் கூட்டுச்சதியே காரணம் என்று ஏற்காட்டில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் கூறிய ஜெயலலிதா  இந்த சதியில் இருந்து மீண்டு மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கியே தீருவேன் என உறுதிப்பூண்டர்

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் எவ்வித கோளாறும் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிலையங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாம். இதனால் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி, நாப்தாவுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் மினவெட்டு உருவாக கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இது இயல்பாக ஏற்பட்ட கோளாறு அல்ல. தி.மு.க.,வின் ஆலோசனையின்பேரில் மத்திய அரசின் சதித்திட்டம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். என் மீது உள்ள கோபம் மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக , அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த இந்த சூழ்ச்சியை காங்கிரசும், தி.மு.க.,வும் இணைந்து சதி செய்கின்றன.

இருப்பினும், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு சுபிட்சமாக நிலையை உருவாக்கியே தீருவேன் என உரையாற்றினர்.

கார்ல்சனுக்கு முதல்வர் பாராட்டு

கார்ல்சனுக்கு முதல்வர் பாராட்டு

கார்ல்சனுக்கு முதல்வர் பாராட்டு

தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற நார்வே நாட்டைச் சார்ந்த மேக்னஸ் கார்ல்சனுக்கு ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார்.

இரண்டாமிடம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வெள்ளிப் பதாகையும், 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்.

ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்?

ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்?

 

ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்?

தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தியத் தேர்தல் விதிகளின்படி ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்.

அதை எதிர்த்து திமுக சார்பில் மறைந்த முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்ற வருடம் குப்புசாமி இறந்ததை அடுத்து  
அந்த மனுவை மீண்டும் விசாரிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் ஏ.கே.எஸ் விஜயன் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இது குறித்து விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு;

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு;

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் 30–ந்தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்  நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுடன் கர்நாடக அரசு ஆலோசனை செய்து முடிவெடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை வழங்கியது.

இதற்கிடையில் கர்நாடக அரசு சிறப்பு கோர்ட்டின் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா என்பவரை நியமனம் செய்தது. இதனால் ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு  புதிய நீதிபதி நியமனம்  குறித்து விளக்கம் அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

கர்நாடக அரசு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் சார்பாக பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த வழக்கில் தனது பதவியை நீட்டிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே உரிய முறைப்படி புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டிருந்தது. பதில் மனு  தாக்கல் செய ஜெயலலிதாவுக்கு 2 வாரகாலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

English summary
jeyalalitha assert accumulation case  Karnataka  appointed   John Michael kunha but J J wants  Balakrishna

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு;

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு;

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் 30–ந்தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்  நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுடன் கர்நாடக அரசு ஆலோசனை செய்து முடிவெடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை வழங்கியது.

இதற்கிடையில் கர்நாடக அரசு சிறப்பு கோர்ட்டின் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா என்பவரை நியமனம் செய்தது. இதனால் ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு  புதிய நீதிபதி நியமனம்  குறித்து விளக்கம் அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

கர்நாடக அரசு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் சார்பாக பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த வழக்கில் தனது பதவியை நீட்டிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே உரிய முறைப்படி புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டிருந்தது. பதில் மனு  தாக்கல் செய ஜெயலலிதாவுக்கு 2 வாரகாலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

English summary
jeyalalitha assert accumulation case  Karnataka  appointed   John Michael kunha but J J wants  Balakrishna

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?