Dinaithal - தினஇதழ்

எனது காலில் விழுந்து வணங்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவு

எனது காலில் விழுந்து வணங்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவு


என் காலையோ இல்லை மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்று பிரதமர் மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக., நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறுகையில்,

என் காலையோ அல்லது மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்றார்.

மேலும் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வரும் முன், உங்களை அதற்கேற்றவாறு தயார் செய்து கொண்டு வாருங்கள். கடுமையாக பணியாற்றுங்கள். நாடாளுமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன்  நரேந்திர மோடி சந்திப்பு!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நரேந்திர மோடி சந்திப்பு!

இந்தியாவின் 15-வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டமோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வந்த வேளையில்,இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் இதற்கிடையில், வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளில் இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரக் ஒபாமாவுடனான மோடியின் இந்த சந்திப்பானது, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா உறவுக்கு இடையில் ஏற்பட்ட சிறு மனக் கசப்புக்கு மருந்து போடும் வகையில் அமையும் என்று இந்திய வெளியுறவு துறை வட்டாரங்கள் நம்புகின்றன.

English summary

september month obama meets modi

நரேந்திர மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு  அழைப்பிதழ்


நரேந்திர மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு அழைப்பிதழ்

பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி நாடாளமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார்.

இதில் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரது வேட்பு மனுவிற்கு வதோதராவில் டீக்கடை நடத்திவரும் கிரண் மஹிடா என்பவர் முன்மொழிந்து கையெழுத்திட்டார்.

இந்நிலையில் தேர்தலில் பெரும்பான்மை இடங்களுக்கு அதிகமான இடத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ளதால், நரேந்திர மோடி தலைமையில் வரும் 26 ஆம் தேதி பாஜக ஆட்சியமைக்கிறது.

வரும் திங்கட்கிழமை  நாட்டின் பதினான்காவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவருமாறு  வேட்பு மனுவில் முன்மொழிந்த டீக்கடைக்காரர் கிரண் மஹிடாவுக்கு மோடி அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கிரண் மஹிடா, நான் நிச்சயமாக இந்த விழாவில் பங்கேற்பேன் என்றார்

நரேந்திர மோடியின் கைகளிலிருந்து ரத்தம் வழிகிறது: திரிணாமுல் காங்கிரஸார் கடும் தாக்கு!


நரேந்திர மோடியின் கைகளிலிருந்து ரத்தம் வழிகிறது: திரிணாமுல் காங்கிரஸார் கடும் தாக்கு!

பாஜக., பிரதமர் வேட்பாளரான மோடி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும் போது, கம்யூனிஸ்ட்டுகள் 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை நாசப்படுத்தியதை விட, மம்தா கடந்த 35 மாதங்களில் மேற்கு வங்கத்தை நாசப்படுத்தியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதனால் கடும் கோமடைந்த திரிணாமுல் காங்கிரஸார் நரேந்திர மோடியை குஜராத்தின் கசாப்பு வியாபாரி என நேற்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்றும் தனது தாக்குதலை தொடர்ந்த அக்கட்சி, நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவரது கைகளை உயர்த்துகையில் அவரது கைகளிலிருந்து ரத்தம் வழிவதாக கூறியுள்ளது.

இந்த கருத்தை அக்கட்சி தலைவர்களில் ஒருவரான டெரிக் ஓ பிரையன் இவ்வாறு கூறியுள்ளார்.

English summary

blood is coming out of modi's hand :tirunamool congress party leader  slams modi

நரேந்திர மோடி குறித்து ஜெயலலிதா கடும் விமர்சனம்


நரேந்திர மோடி குறித்து ஜெயலலிதா கடும் விமர்சனம்

மக்களை பற்றி நினைக்கும் ஒரே இயக்கம் அதிமுக.,தான். இந்நிலையில், திமுக.,வுடன் எங்கள் கட்சியை இணைத்து, இவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்வதில்லை என நரேந்திர மோடி கூறி வருகிறார்.

அதிமுக.,ஆட்சியில் மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குஜராத் மாடல் ஒரு மாயை.

மேலும் குஜராத்தை காட்டிலும் தமிழகம் அதிகமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

english summary

jaya slams modi

சோப்பு போல நரேந்திர மோடிக்கு விளம்பரம்: கபில் சிபல் கடும் விமர்சனம்


சோப்பு போல நரேந்திர மோடிக்கு விளம்பரம்: கபில் சிபல் கடும் விமர்சனம்

டெல்லி சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கபில் சிபல் டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே தான் வாக்களித்ததாக கூறிய அவர்
 
தொலைக்காட்சிகளில் சோப்புக்கு விளம்பரம் செய்வது போல, பா.ஜனதா கட்சி மோடியை ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்கிறது. எனினும் ஒரு பொருளை வாங்கி பயன்படுத்திய பின்னரே அது விளம்பரத்தில் பார்த்தது போல இல்லை என்பது தெரிய வரும். அதே நிலைமை தான் நரேந்திர மோடி பற்றிய விளம்பரம் என்றார்.

ENGLISH SUMMARY

marketing of modi is like marketing a soap ; kapil sibal

நரேந்திர மோடியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் அந்தோணி பதிலடி

நரேந்திர மோடியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் அந்தோணி பதிலடி

மகாராஷ்ட்ரா தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மோடி,

"நாட்டு பற்று குறித்து சோனியா காந்தி எங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. இந்திய மீனவர்களை கொன்ற இத்தாலி வீரர்கள் எப்படி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர்? அவர்கள் சிறையில் அடைக்காமல் போனதற்கு என்ன காரணம்? இதுதான் சோனியா காந்தியின் நாட்டுப்பற்றா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் எ.கே.அந்தோணி,

"மோடியின் இந்த குற்றச்சாட்டு ஆதராமற்றது. அவர் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் அல்ல என்பதை அவரின் இந்த பேச்சே எடுத்துக்காட்டி உள்ளது," என்றார்.

English Summary

ak anthony gives answers to modi

நரேந்திர மோடி எனது நல்ல நண்பர் : கருணாநிதி

நரேந்திர மோடி எனது நல்ல நண்பர் : கருணாநிதி

நரேந்திர மோடி எனது நல்ல நண்பர் :கருணாநிதி

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி எனது நல்ல நண்பர் என்று திமுக., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நரேந்திர மோடி குறித்து கருணாநிதி கூறுகையில், மோடி கடின உழைப்பாளி. அவர் எனது நெருங்கிய நல்ல நண்பர் என்று தெரிவித்தார்.

English Summary

narendra modi is my good friend

டெல்லி கற்பழிப்பு தலைநகராகிவிட்டது: நரேந்திர மோடி

டெல்லி கற்பழிப்பு தலைநகராகிவிட்டது: நரேந்திர மோடி

கர்நாடக மாநிலம், தாவண்கரேவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது:

நாட்டின் தலைநகரான டெல்லியில் ஏராளமான கற்பழிப்புக்கள் நடந்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். ஆனால் அவர்கள், டெல்லியை கற்பழிப்பு தலைநகரமாக மாற்றிவிட்டனர்.

பெண்களை பாதுகாக்கும் திட்டங்களுக்கு காங்கிரசில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

English summary

delhi had become a rape capital : modi

நரேந்திர மோடி சென்னை வருகை :5 அடுக்கு பாதுகாப்பு

நரேந்திர மோடி சென்னை வருகை :5 அடுக்கு பாதுகாப்பு

மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக, மோடி வரும் 8ம் தேதி சென்னை வருகிறார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நரேந்திர மோடியின் விமானம் சென்னை பழைய விமான நிலையத்தில் இறங்குகிறது.

மேலும் அங்கிருந்து அவர் கார் மூலம் வண்டலூர் செல்கிறார்.  சென்னை பழைய விமான நிலையம் தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English Summary

narndra modi chennai visit 5 stages of security

பக்கம் 1 / 3

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?