Dinaithal - தினஇதழ்

அமெரிக்க நீதிபதியான இந்தியப் பெண்

அமெரிக்க நீதிபதியான இந்தியப் பெண்

பாஸ்டன் நகரில் வழக்கறிஞராக உள்ள இந்திரா தல்வானி, மாகாண நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை வாதாடி வருகிறார்.

சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வின்ஸ் சாப்ரியா என்பவரை கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிபதியாகவும், மணீஷ் ஷா என்பவரை இலினாய்ஸ் வடக்கு மாவட்ட நீதிபதியாகவும் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர். இப்போது இந்திராவுக்கு முதலில் ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் அமெரிக்காவின் முதல் தெற்காசிய நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

இந்திரா நியமனம் குறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், நீதித்துறையில் உள்ளவர்கள் நியாயமான மனதுடன், நல்ல திறமையான, நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அந்த தகுதிகளைப் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

வடஅமெரிக்காவின் தெற்காசிய வழக்கறிஞர் சங்கத் தலைவர் நதீம் பெஷார் கூறுகையில், மாவட்ட நீதிபதியாக தெற்காசியாவை சேர்ந்த மேலும் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த ச்சியைத் தருகிறது.

அந்தப் பதவிக்கு இந்திரா தகுதியானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Summary:

The Indira talvani a lawyer in Boston , has been advocating civil litigation in state courts .

Indian descent in the Northern District of California as a judge , and the Northern District of Illinois, Judge Manisha Shah , who was appointed by the Obama government .

They are waiting for approval .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?