Dinaithal - தினஇதழ்

கூகுள்(Google) நிறுவனத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை நடவடிக்கை

 

0googleஅமெரிக்க அரசு சமீபத்தில் "பிரிசம்" என்னும் கண்காணிப்பு திட்டத்தை அமல்படுத்தியது.

இத்திட்டத்தின்படி அனைத்து வாடிக்கையாளர்களின் தொலைபேசி உரையாடல்களும், இணையதள நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படுகின்றன

இதனால் அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு, தங்கள் நாட்டு வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை வழங்கிய "கூகுள்"(Google) இணையதளம் மீது ஐரோப்பிய நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளன.

கூகுள் இணைய தளத்தை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை, அமெரிக்க தேசிய உளவு நிறுவனத்திற்கு கூகுள் வழங்கியுள்ளதனால் அதிருப்தியடைந்துள்ள, ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளன.

பிரான்ஸ் நாட்டு சட்டத்தை, கூகுள் இணையதளம் மீறியுள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய, தனியுரிமை கொள்கைகளை மாற்றிக் கொள்வதற்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்றிக் கொள்ளாவிடில், 1.2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் தகவல் பாதுகாப்பு நிறுவனமான, சி.என்.ஐ.இ.எல் எச்சரித்துள்ளதோடு "கூகுள் நிறுவனத்திற்கு, 2.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும், இந்த இணையதள நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-தின இதழ் செய்தி குழு

 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?